பாடசாலைகளில் தொலைதூர கல்வி வசதிகளை மேம்படுத்த ஹுவாய் நிறுவனம் இணக்கம்! கல்வி அமைச்சர்
வரையறுக்கப்பட்ட ஹுவாய் டெக்னோலஜிஸ் நிறுவனம், இணையம் மூலமான தொலைதூர கல்வி வசதிகளை மேம்படுத்துவதற்காக நாட்டில் உள்ள பாடசாலைகளுக்கு இலவச உபகரணங்களை வழங்க இணங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
ஹவாய் டெக்னோலஜிஸ் ஒரு சீன பன்னாட்டு தொலைத்தொடர்பு உபகரணங்கள் மற்றும் சேவை நிறுவனமாகும்.
இது சீனாவின் குவாங்டாங்கில் தலைமையகத்தைக் கொண்டுள்ளது.
அண்மையில் அமைச்சில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தின்போது சுமார் 30,000 சாதனங்களை வழங்குவதற்கு ஹுவாய் இணக்கம் வெளியிட்டுள்ளது.
கற்றல் மற்றும் கற்பித்தல் செயல்முறையை பரஸ்பரம் செயல்படுத்துவது, பள்ளிகளுக்கு இணைய வசதிகளை வழங்குவது என்பன அவசியமான ஒரு நடவடிக்கைகளாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam