அரசியலில் ஈடுபடப்போகும் ஹர்பஜன் சிங்
அரசியலில் ஈடுபடுவது தொடர்பில் உரிய நேரத்தில் அறிவிக்கவுள்ளதாக இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஹர்பஜன் சிங், அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் நேற்று ஓய்வை அறிவித்தார்.
இந்தநிலையில் ஹர்பஜன் சிங் அரசியலில் ஈடுபடப்போவதாக தகவல்கள் வெளியாகின.
இதனையடுத்து தமது எதிர்காலத் திட்டத்தை பொறுத்தவரையில் தொடர்ந்து கிரிக்கெட்டுடன் இணைந்திருக்கப் போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
அதேநேரம் தாம் எந்த கட்சியில் சேருவது என்பதை முன்கூட்டியே அறிவிக்கவுள்ளதாகவும், அரசியல் மூலமாகவோ, வேறு எந்த முறையிலோ பஞ்சாப்புக்கு சேவை செய்யப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.




நேபாளத்தில் இருந்து இன்னொரு துயரமான செய்தி வெளிவரலாம்... சுரங்கத்தில் சிக்கிய 900 பேர்கள் News Lankasri