ஹட்டன் ஜும்ஆப் பள்ளிவாசல் பாதுகாப்பு ஊழியர் கொலை - சந்தேகநபர் கைது (Photos)

Sri Lanka Police Crime Branch Criminal Investigation Department Crime Hatton
By Farook Sihan Dec 20, 2023 10:35 AM GMT
Farook Sihan

Farook Sihan

in குற்றம்
Report

ஹட்டன் ஜும்ஆப் பள்ளிவாசல் பாதுகாப்பு ஊழியரைக் கொலை செய்து அங்கு கொள்ளையடித்து தப்பி சென்ற சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த கொலை சம்பவம் கடந்த டிசம்பர் மாதம் 9 ஆந் திகதி சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.

ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலின் பாதுகாப்பு ஊழியராக கடமையாற்றிய ஹட்டன் ஹிஜிரபுர பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய சி.எம். இப்ராஹிம் என்பவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் பள்ளிவாசலில் இருந்த உண்டியலும் உடைக்கப்பட்டு பணம் களவாடப்பட்டிருந்தது.

குற்றச்சம்பவங்களுடன் தொடர்பு

சந்தேக நபர் பள்ளிக்குள் வருவது உண்டியலை உடைப்பது போன்ற காட்சிகள் சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளதுடன் கைது செய்வதற்கான விசாரணை தேடுதல் வேட்டையில் ஹட்டன் பொலிஸார் ஈடுபட்டிருந்த நிலையில் 10 நாட்களின் பின்னர் சந்தேக நபர் முகைதீன் பாவா லாபீர் (வயது-45) சம்மாந்துறை பொலிஸாரினால் செவ்வாய்க்கிழமை (19.12.2023) கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹட்டன் ஜும்ஆப் பள்ளிவாசல் பாதுகாப்பு ஊழியர் கொலை - சந்தேகநபர் கைது (Photos) | Hatton Security Guard Murder Suspect Arrested

ஹட்டன் ஜும்ஆப் பள்ளிவாசல் பாதுகாப்பு ஊழியர் கொலை - சந்தேகநபர் கைது (Photos) | Hatton Security Guard Murder Suspect Arrested

கைதான சந்தேக நபருக்கு சாய்ந்தமருது, பொத்துவில், ஹற்றன், பொலிஸ் நிலையங்களில் கொலை கொள்ளை தொடர்பாக முறைப்பாடுகள் உள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேக நபர் கடந்த (27.01.2022) அன்று அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதேசத்தில் மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்காக மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 3 மாதங்களுக்கு முன்னர் தப்பி சென்றிருந்தார்.

இவ்வாறு தப்பி சென்ற சந்தேக நபர் பல குற்றச்சம்பவங்களுடன் தொடர்புடையவர் என பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து வெளியாகி உள்ளது.

சிறைச்சாலை அதிகாரிகள்

இதனை அடுத்து சந்தேக நபர் தப்பி சென்ற சம்பவம் தொடர்பில் 5 க்கும் மேற்பட்ட சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளக விசாரணைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

ஹட்டன் ஜும்ஆப் பள்ளிவாசல் பாதுகாப்பு ஊழியர் கொலை - சந்தேகநபர் கைது (Photos) | Hatton Security Guard Murder Suspect Arrested

இவ்வாறான நிலையில் தப்பி சென்று தலைமறைவாகி இருந்த குறித்த சந்தேக நபர் ஹட்டன் ஜும்ஆப் பள்ளிவாசல் பாதுகாப்பு ஊழியரை கடந்த 10 நாட்களுக்கு முன்னர் கொலை செய்து அங்கு கொள்ளையடித்து தலைமறைவாகி இருந்துள்ளார்.

இந்நிலையில் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ்.ஜயலத் வழிகாட்டலில் பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கே. சதீஷ்கர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US