ஹட்டன் - கண்டி பிரதான வீதியூடான போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள தடை
ஹட்டன் (Hatton) - கண்டி (Kandy) பிரதான வீதியின் வட்டவளை நகரை அண்மித்த பகுதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் குறித்த வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த அனர்த்தம் இன்று (23.05.2024) மதியமளவில் இடம்பெற்றுள்ளது.
போக்குவரத்து பாதிப்பு
இதன் காரணமாக குறித்த வீதி ஊடாக ஹட்டனில் இருந்து கினிகத்தேனை வழியூடாக கண்டி, கொழும்பிற்கு செல்லும் வாகனங்களும் அதேபோல் கொழும்பு, கண்டி பகுதிகளில் இருந்து ஹட்டன் பிரதேசத்திற்கு பயணிக்கும் வாகனங்களும் பயணிக்க முடியாத நிலையில் வாகனங்கள் நீண்ட தொடராக காத்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வட்டவளை பொலிஸார் பொது மக்களின் உதவிகளுடன் மரத்தின் பாரிய கிளைகளை அகற்றி பாதிக்கப்பட்ட வீதியூடான போக்குவரத்தினை சீர் செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
