றீ(ச்)ஷாவில் சுவைமிக்க மாம்பழங்கள் அறுவடை
கிளிநொச்சி (kilinochchi) இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் (Reecha Organic Farm) மாம்பழச் செய்கையானது சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் பசளைகளை பயன்படுத்தி இந்த மாம்பழச் செய்கை மேற்கொள்ளப்படுகின்றமை ஒரு விசேட அம்சமாகும்.
இந்நிலையில், இந்த மாம்பழச் செய்கையின் ஊடாக ஆரோக்கியமானதும் சுவை மிக்கதுமான மாம்பழங்கள் அறுவடை செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் சுற்றுலாத் தலமாகவும் அமைந்துள்ளது.
இதேவேளை, சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பண்ணையில் பல்வேறு பயிர்ச்செய்கைகள் உட்பட சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல்வேறுபட்ட புதிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam
