வடக்கு, கிழக்கு முழு கடையடைப்பு போராட்டத்திற்கு வவுனியாவிலும் ஆதரவு (Photos)
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கொக்கிளாயில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி தொடர்பான அகழ்வு மற்றும் நீதி கோரி விடுக்கப்பட்ட முழு கதவடைப்பு போராட்டத்திற்கு வவுனியாவிலும் பல்வேறு தரப்பினர் இன்று (28.07.2023) தமது ஆதரவை தெரிவித்திருந்தனர்.
வவுனியாவில் உணவகங்கள், மருந்தகங்கள் தவிர்ந்த வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்ததுடன் மரக்கறி மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனை சந்தையும் மூடப்பட்டிருந்தது.
சேவையில் ஈடுபட்ட பேருந்துகள்
இதேவேளை பாடசாலைகளுக்கு குறைந்த அளவிலான மாணவர்களே வருகை தந்திருந்ததுடன் தூர சேவை பேருந்துகள் மற்றும் சில உள்ளூர் பேருந்துகளும் சேவையில் ஈடுபட்டிருந்தது.
வவுனியா வர்த்தகர் சங்கம், தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம்,
முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம் உட்பட பொது அமைப்புக்கள் பகிரங்கமாக கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படாத நிலையிலும் கூட வர்த்தகர் சங்கத்தின் தலைவர், செயலாளர்
தமது வர்த்தக நிலையத்தை மூடியிருந்தமையினால் ஏனைய வர்த்தகர்களும் தமது வர்த்தக
நிலையங்களை மூடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.













அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
