வடக்கு - கிழக்கில் பொது முடக்கம் தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள தீர்மானம்
முல்லைத்தீவு நீதிபதி ரி. சரவணராஜாவின் பதவி விலகலுக்கு நீதி கோரி எதிர்வரும் வாரம் வடக்கு கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய வகையில் பொது முடக்கம் முன்னெடுக்கவுள்ளதாக 7 தமிழ் தேசிய கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.
யாழ்ப்பாணத்தில் 7 தமிழ் தேசிய கட்சிகளுக்கு இடையில் இன்று(06.10.2023) இடம்பெற்ற கூட்டத்தில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது முடக்க நடவடிக்கை
அத்துடன் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடிய பின் அடுத்த வாரம் பொது முடக்க நடவடிக்கை தொடர்பில் முடிவு எடுக்கப்படும் எனவும் பொது முடக்கத்திற்கான திகதி எதிர்வரும் சில தினங்களுக்குள் அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான விக்னேஸ்வரன், சித்தார்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், சுரேஷ் பிரேமச்சந்திரன், சிறீகாந்தா வடமாகணசபை முன்னாள் உறுப்பினர் கஜதீபன், மற்றும் தியாகராஜா நிரோஷ், மாவை சேனாதிராஜா கலையமுதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.



குடும்ப குத்துவிளக்கு சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் மீனாவா இது?.. High Heels, செம மாடர்ன் உடை என கலக்குறாரே.. Cineulagam

ஜேர்மனி போன்று உக்ரைனும் இரண்டாகப் பிளக்கப்பட வேண்டும்... ட்ரம்பின் சிறப்பு தூதுவர் புதிய திட்டம் News Lankasri
