கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம்: நீதிகோரி போராட்டத்திற்கு அழைப்பு
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாபெரும் கவனயீர்ப்பு பேரணி ஒன்றை மேற்கொள்ள வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் நேற்று (24.07.2023) மாலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் போராட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் வட்டுவாகல் பாலத்தில் ஆரம்பித்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை நோக்கி பேரணியொன்றும் மேற்கொள்ளப்படவுள்ளது.
வடக்கு - கிழக்கு தழுவிய பேரணி
குறித்த கடையடைப்பிற்கு அனைத்து தரப்பினரும் அரசியல் கட்சிகளும் எவ்வித பேதமுமின்றி ஆதரவளிக்க வேண்டும் என்பதுடன், அன்றையதினம் விடுமுறை என்பதால் வர்த்தகர்கள், விவசாயிகள், கடற்றொழிலாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் ஆதரவளிப்பதுடன் முல்லைத்தீவில் நடைபெறவுள்ள போராட்டத்திலும் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர்.
குறித்த செய்தியாளர் சந்திப்பில் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி தம்பிராசா செல்வராணி திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி செபஸ்த்தியான் தேவியும் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
