சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இடமாற்றம்:அமைச்சரின் அவசர அறிவிப்பு
சிறைச்சாலை அதிகாரிகளை இடமாற்றம் செய்வதற்கான பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாகக் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கூறினார்.
எதிர்வரும் நாட்களில் அதிகமான அதிகாரிகள் இடமாற்றப்படுவர் எனவும் அவர் குறிப்பிட்டார். கொழும்பு, வெலிக்கடை, பூசா உள்ளிட்ட பல சிறைச்சாலைகளில் நீண்ட காலமாக நடந்த பல்வேறு முறைகேடுகள் குறித்து கவனம் செலுத்தி வந்த நிலையில் இத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
சில சிறைக் காவலர்கள், கைதிகள் மற்றும் பல்வேறு சந்தேக நபர்களுடன் நெருக்கமாக உறவை பேணிய நிலையில் சட்டவிரோத மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்ற தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையில், சிறைச்சாலை சோதனைகளுக்காக அவ்வப்போது விசேட அதிரடிப்படையின் உதவியைப் பெற சிறைச்சாலைத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.