யுக்திய நடவடிக்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி: ஹர்ஷன நாணயக்கார உறுதி
யுக்திய நடவடிக்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்போம் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய(05) அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“முன்னாள் பதில் பொலிஸ் மா அதிபராக இருந்த தேசபந்து தென்னகோன் காலத்தில் பொலிஸ் திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப் பொருள் பாவனையை ஒழிப்பதற்காக 'யுக்திய' நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்
குறித்த நடவடிக்கையின் போது, அநேகருக்கு அசாதாரணம் இழைக்கப்பட்டதோடு பொய்க் குற்றச்சாட்டில், பழிவாங்கும் நோக்கிலும் பலர் கைது செய்யப்பட்டனர்.
யுக்திய நடவடிக்கையுடன் தொடர்புடைய வகையில் இடம்பெறும் சித்திரவதைகள், மிக மோசமாக நடத்தப்படல் மற்றும் தன்னிச்சையாகக் கைது செய்து தடுத்து வைத்தல் போன்ற சம்பவங்கள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அத்தோடு எமக்கும் அது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அவற்றுக்கு நாம் நீதியை பெற்றுக் கொடுப்போம்.
தேசபந்து தென்னகோனுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கிறோம், ஆனால் அவரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் இல்லையா என பலரும் கேட்கின்றனர்.
நாம் கடந்த கால சம்பங்களை கண்டுள்ளோம். அதனால் நீதித்துறையில் நம்பிக்கை கொண்டு செயலாற்றுகிறோம்” எனக் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 3 மணி நேரம் முன்

பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri
