ஹர்ஷவால் கட்சியில் குழப்பம்! சஜித் வெளியிட்டுள்ள அவசர காணொளி
கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பில் ஹர்ஷ டி சில்வா எம்.பி வெளியிட்ட அறிக்கையால் கட்சிக்குள் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சஜித் பிரேமதாச மற்றும் அவரின் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பில் வெளியிட்ட 'இழிவான' பிரசாரத்திற்கு எதிராக ஹர்ஷ டி சில்வா நாடாளுமன்றத்திலும் சாதகமான கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
இது கட்சிக்குள் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
நெருக்கடியில் சிக்கியிருக்கும் சஜித்
நெருக்கடியின் தீவிரம் காரணமாக, கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச திடீரென ஒரு காணொளியை வெளியிட்டு, கல்வி சீர்திருத்தங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளார்.
அதில், தரம் 06 சீர்திருத்தங்களை நிறுத்தி வைத்தது ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் நடவடிக்கை. அதற்கான பொறுப்பை எம் மீது சுமத்த அரசாங்கம் முயற்சித்து வருவதாகவும் அவர் கூறினார்.
ஹரிணிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிச்சயமாக கொண்டு வரப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் பலமுறை கூறியுள்ளார். இருப்பினும், தரம் 06 தொடர்பான தவறுகளை திருத்தி சீர்திருத்தங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிகழ்வுகளின் பின்னணியில் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள வெடிப்புக்கள் வெளிப்படையாகியுள்ளன. கட்சியின் செயற்குழுவில் நான்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அந்த பிரதிநிதிகளில் சர்வதேச மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களில் தண்டனை பெற்ற ஒருவரைச் சேர்த்துள்ளதாக சிரேஷ்ட தலைவர்களின் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam