கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய இந்திய தொழிலதிபர்
இலங்கை வந்த பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
43.89 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள குஷ் போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டு வந்த வெளிநாட்டுப் பயணி ஒருவர் இன்று காலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் 29 வயதான இந்திய தொழிலதிபர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள்
இந்தப் பயணி இன்று அதிகாலை 12.30 மணிக்கு தாய்லாந்தின் பேங்கொக்கிலிருந்து தாய் எயார்வேஸ் விமானம் TG-307 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.

அவர் 2 பயணப் பைகளில் அடைக்கப்பட்ட 4 பொட்டலங்கள் குஷ் போதைப்பொருளைக் கொண்டு வந்ததாகவும், அதன் மொத்த எடை 4 கிலோகிராம் மற்றும் 389 கிராம் என சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
பயணியையும், குஷ் போதைப்பொருளையும் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சராக இருந்தாலும் இதுதான்... சங்கீதாவின் வளர்ப்புக்கு Royal salute! படுவைரலாகும் வீடியோ Manithan