எதிர்க்கட்சி தலைவராகிவிடுவாரோ ஹர்ஷ டி சில்வா! ஆளும் தரப்பு சாடல்
ஹர்ஷ டி சில்வா இல்லையென்றால் எதிர்க்கட்சி இல்லை போல தெரிகிறது என்றும் போகும் போக்கைப் பார்த்தால் ஹர்ஷ டி சில்வா எதிர்க்கட்சி தலைவராகிவிடுவாரோ தெரியாது எனவும் உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சின் செலவு தொடர்பில் நடைபெற்ற குழுநிலை விவாதத்தின் போது அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
ஹர்ஷ டி சில்வா
“ஹர்ஷ டி சில்வா இல்லையென்றால் எதிர்க்கட்சி இல்லை போல. அது தான் பிரச்சினை. போகும் போக்கைப் பார்த்தால் ஹர்ஷ டி சில்வா எதிர்க்கட்சி தலைவராகிவிடுவாரோ தெரியாது.
10 வருடங்களுக்குப் பழைமையானவை மாத்திரமல்ல 15 வருடங்களுக்குப் பழைமையான விசாரணைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
நாங்கள் ஆட்சிக்கு வந்து ஐந்து மாதங்கள் தான் ஆகின்றது. சிலர் வரலாற்றை மறந்து செல்வதற்கு முயற்சிக்கிறார்கள். ஆனால் வரலாற்றை மறக்க முடியாது.
குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்.” என அமைச்சர் இதன் போது கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |