உங்களுக்கு வெட்கமில்லையா..! அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்த ஹர்ஷ
பொருளாதார வளர்ச்சி வீதம் 3.5 சதவீதத்தால் குறைவடையும் என கூறுவதற்கு அரசாங்கத்திற்கு வெட்கமில்லையா என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா வினவியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய(08.05.2025) அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“2048ஆம் ஆண்டளவில் அபிவிருத்தி நாடாக மாற வேண்டும் என்றால் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி ஆண்டிற்கு 8 தொடக்கம் 9 வீதமாக இருக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறினார்.
பொருளாதார மாதிரி
அப்போது, இலங்கை விரைவாக அபிவிருத்தி அடைந்த நாடாக மாற வேண்டும் என தேசிய மக்கள் சக்தியினர் விமர்சித்திருந்தனர்.
எனினும், தற்போது இலங்கையின் பொருளாதார வளர்ச்சி எதிர்வரும் ஆண்டுகளில் வீழ்ச்சியடையும் என அரசாங்கம் கூறுகின்றது. இவ்வாறு கூற உங்களுக்கு வெட்கமாக இல்லையா?
பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்றால் உங்களின் பொருளாதார மாதிரியை நீங்கள் மாற்ற வேண்டும்.
எனினும், இந்த அரசாங்கத்திற்கு பொருளாதார மாதிரியை மாற்றினால் எந்த பொருளாதாரத்திற்கு செல்வது என்பது குறித்து தெரியாது” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பஞ்சாப்பில் ஏவுகணை தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்? - இடைமறித்த இந்திய வான்பாதுகாப்பு அமைப்பு News Lankasri
