மீண்டும் கோப் குழுவின் தலைவராக ஹர்ஷ டி சில்வா
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா மீண்டும் அரசாங்க நிதிப் பற்றிய குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நியமனம் தொடர்பில் இன்று(09.02.2024) அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், ''நியாயம் மற்றும் பொறுப்புணர்வை உறுதிசெய்து, பல்வேறு பிரச்சினைகளை தீர்ப்பதில் எங்களின் தீர்மானம் வலுவாக உள்ளது.
Grateful for unanimous support by Opp in reappointment as #COPF Chair. Our resolve remains strong to address diverse cases, ensuring fairness & accountability. Committed to justice & econ stability, essential during IMF program & regaining global confidence to meet growth targets pic.twitter.com/0dtR3CCL7x
— Harsha de Silva (@HarshadeSilvaMP) February 9, 2024
சர்வதேச நாணயநிதிய திட்டம்
நீதி மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு அர்ப்பணிப்புடனும், சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்தின் போது அவசியம் மற்றும் வளர்ச்சி இலக்குகளை சந்திக்க உலகளாவிய நம்பிக்கையை மீண்டும் பெறவும் எதிர்பார்த்துள்ளோம்.'' என தனது டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.
இதற்கு முன்னர் 2023.06.07 ஆம் திகதி கோப் குழுவின் தலைவராக ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டிருந்தார்.
அத்தோடு, இதற்கு முன்னர் கோப் குழுவின் தலைவராக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |