தமிழர்கள் மீதான உரிமை மறுப்புக்களை ஏற்றுக் கொள்ள முடியாது : குரலற்றவர்களின் குரல் அமைப்பு
தமிழர்கள் மீது தொடர்ச்சியாக உரிமை மறுப்புக்கள் கட்டவீழ்க்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என குரலற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
உரிமை மறுப்பு தொடர்பில் குரலற்றவர்களின் குரல் அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
இந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழ் தேசிய இனத்தின் உரிமை
“எமது நாட்டில் கடநத 76 ஆண்டுகளாக மக்களின் வரிப்பணத்தை செலவிட்டு 'தேசிய சுதந்திர தினம்' என்ற பெயரில் ஒரு கோலாகல கொண்டாட்ட நிகழ்வு நடைபெற்று வருகிறது.
அதற்கேற்ப, 2024ஆம் ஆண்டுக்கான சம்பிரதாய சுதந்திர தினம் கறுப்பும் வெள்ளையுமாக கடைப்பிடிக்கப்பட்டு தமிழ் தேசிய இனத்தின் உரிமைகளை மறுக்கின்ற தினமாக கடந்து போயுள்ளது.
இதன்படி நாட்டின் தேசிய சுதந்திர நாளன்று தமிழர் தாயக பிரதேசத்தில் 'சுதந்திரத்தின் சொல்லர்த்தத்தை' ஜனநாயகப் பண்புடன் பொது வெளிப்படுத்த முயற்சித்த பல்கலைக்கழக மாணவர்கள் மீதும் மக்கள் பிரதிநிதிகள் மீதும் அரசதிகாரத்தை ஏவி விட்டு அடக்குமுறையை பிரயோகித்துள்ளமையானது, இலங்கை ஒரு 'ஜனநாயக' நாடென்ற வகையில் அவமானகரமான செயலாகும்.” என்றுள்ளது.
மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,