அருட்தந்தையின் விகாரை உபதேசம்.. அநுரவை நையாண்டி செய்த ஹர்ஷ
ஜனாதிபதி அநுரவின் பேச்சு, அருட்தந்தை ஒருவர் விகாரையில் உபதேசம் செய்தது போன்றிருந்தது என ஐக்கிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், "ஜனாதிபதி அநுரவின் பேச்சு, அருட்தந்தை ஒருவர் விகாரையில் உபதேசம் செய்தது போன்றிருந்தது. சண்டியர் போல் கையை நீட்டியவாறு எச்சரிக்கும் தொனியில், என்னை விமர்சிக்கவும் செய்தார்.
நான் ஜனாதிபதியை பகிடிக்கு எடுக்க மாட்டேன். ஜனாதிபதியின் சிந்தனை, சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் மற்றும் பெலவத்தையின் கொள்கைகள் எல்லாவற்றையும் அவர் குழப்பியுள்ளார்.
ஜனாதிபதியின் கருத்து
அவ்வாறான ஒரு தன்மையையே நான் காண்கிறேன். எப்படியாவது கடன் எடுத்து பாதைகளை அமைப்பதாகவும் மின்சார சபையை சீரமைப்பதாகவும் தெரிவித்தார்.
ஆனால் அவர்களின் கொள்கை அரசாங்க நிறுவனங்களை விற்க கூடாது, தேசிய பாதுகாப்பை வைத்திருக்க வேண்டும். அத்தோடு சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும் என்றார்.
சூழ்ச்சிகள் எங்கிருக்கின்றன என்று தெரியாது. சிலவேளை தேசிய மக்கள் சக்திக்கு எதிராக ஜே.வி.பியின் சூழ்ச்சியாக இருக்கலாம். IMFஇன் நிபந்தனைகளை மாற்றுவதாக தெரிவித்த ஜனாதிபதி நுறு வீதம் நடைமுறைப்படுத்தியுள்ளார்.
வங்குரோத்தான நிலை, பணவீக்கம் உச்சத்தில், வளர்ச்சி பூச்சியம், காலியாக்கப்பட்ட திரைசேறி, மத்திய வங்கியின் கையிருப்பு இருக்கவில்லை என்று அடுக்கி கொண்டு போனார்.
அனைத்தும் பொய், சாதாரண மக்களுக்கு இவை தெரியாது. ஆனால் எங்களுக்கு பொய் சொல்ல வேண்டாம் ஜனாதிபதியே” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



