சம்மாந்துறையில் மனித பாவனைக்கு தீங்கு விளைவிக்கும் குளிர்பானங்கள் மீட்பு
சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய எல்லைக்குட்பட்ட பகுதியில் மனித பாவனைக்கு தீங்கு விளைவிக்கும் குளிர்பானங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன், குளிர்பானங்களை வைத்திருந்த வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு 20 ஆயிரம் தண்டப்பணம் அறவிடப்பட்டதுமின்றி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரியின் ஆலோசனையின் பேரில் கைப்பற்றப்பட்ட குளிர்பானங்கள் அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
தண்டப்பணம்
அரச பகுப்பாய்வு திணைக்களத்தின் குளிர்பானம் தொடர்பான அறிக்கையில் அனுமதிக்கப்படாத நிறமூட்டியினையும்(Tartrazine - INS 102), அனுமதிக்கப்படாத பாதுகாக்கும் இரசாயனத்தையும்(Benzoic acid) கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, சம்மாந்துறை நீதவான் முன்னிலையில் குளிர்பானத்தை விற்பனை செய்த கடை உரிமையாளரையும் அதனை உற்பத்தி செய்தவரையும் முன்னிலைப்படுத்திய போது, இருவருக்கும் எதிராக ரூபா 20 ஆயிரம் தண்டப்பணம் அறவிடப்பட்டதுமின்றி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri
