பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கிய அமைச்சர் ஹரீனின் செயலாளர் கைது
விளையாட்டுத்துறை மற்றும் சுற்றலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவின் செயலாளர் எனக் கூறிக்கொண்ட ஒருவரையும் அவரது நண்பரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரைத் தாக்கி, கைதான ஒருவரை கடத்தியதாக சந்தேகநபர்கள் இருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
ஹரீனின் செயலாளர்
மதுபோயைில் வாகனம் செலுத்திய சாரதி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தில் சொகுசு வாகனமொன்றில் சென்ற இருவர் தாங்கள் அமைச்சர் ஹரீனின் செயலாளர் எனக் கூறிக் கொண்டு, பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கி கைதானவரை பலவந்தமாக அழைத்துச் சென்றுள்ளனனர்.
குறித்தசந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் இருவரும் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இந்த விவகாரம் தொடர்பில் அமைச்சர் ஹரீனின் தரப்பில் எவ்வித அதிகாரபூர்வ தகவல்களும் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri