ஹரிணிக்கு தொடரும் சிக்கல்! பழங்குடியின தலைவரின் கடும் குற்றச்சாட்டு
இலங்கை பழங்குடியினரின் உரிமைகளை பாதுகாப்பதற்கான சட்டத்திட்டங்களை மூன்று மாதங்களில் செற்படுத்துவதாக கூறிய பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆறு மாதங்களாகியும் ஒன்றும் செய்யவில்லையென இலங்கை பழங்குடியின தலைவரான ஊருவரிகே வன்னியலெத்தோ தெரிவித்துள்ளார்.
உலக பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் சனிக்கிழமை (09) தம்பான பழங்குடியின அருங்காட்சியக வளாகத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில், பழங்குடியின தலைவர் இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
புதிய சட்டமூலம்..
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், கடந்த அரசாங்கங்ளில் எமது உரிமைகளை பாதுகாப்பதற்காக சட்டத்திட்டங்களை திருத்துமாறும் புதிய சட்டமூலத்தை தயாரிக்குமாறு ஆட்சியாளர்களை நாம் கேட்டுக் கொண்டோம் ஆனால் யாரும் முன்வரவில்லை.
முன்னாள் ஜனாதிபதி ரணில் ஆட்சியின் போது இது தொடர்பில் சட்டமூலம் தயாரிக்கப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும் சமர்ப்பிக்கப்பட்டது. அச்சந்தர்ப்பத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதுவும் நடக்கவில்லை.
அப்போது பிரதமர் ஹரிணி எமது உரிமைகள் தொடர்பில் மூன்று மாதங்களில் ஆராய்ந்து செயற்படுத்துவதாக எமக்கு வாக்குறுதியளித்தார். ஆனால் ஆறு மாதங்கள் முடிவடைந்து விட்டன. பிரதமர் எந்த நகர்வையும் மேற்கொள்ளவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பிரதான பழங்குடியினத் தலைவரான, ஊருவரிகே வன்னியலெத்தோ, 1996 ஆம் ஆண்டு ஜெனீவாவில் நடந்த பழங்குடியினர் மாநாட்டில் கலந்து கொண்டபோது, உலக பழங்குடியினர் தின வைபவத்தை இலங்கையில் கொண்டாடுவது குறித்த கருத்தாடல் ஆரம்பமாகியதுடன், அதன்படி, இலங்கையின் முதல் தேசிய பழங்குடியினர் தின கொண்டாட்டம் 1999ஆம் ஆண்டு கொழும்பு விஹார மகா தேவி பூங்காவில் நடைபெற்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா





பாட்டியை காணவில்லை, க்ரிஷ் அம்மாவை கண்டுபிடிக்க மீனா சொன்ன விஷயம், சிக்கப்போகும் ரோஹினி... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

மகேஷுக்கு விபத்து.. ஆனந்தி பற்றிய உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே சீரியல் அடுத்த வார ப்ரோமோ Cineulagam

சன் டிவியின் கயல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தமிழ் சினிமா முன்னணி நடிகை... யார் தெரியுமா, வீடியோ இதோ Cineulagam

ஆசிய நாடொன்றிற்கு எலோன் மஸ்க் விடுத்த கடும் எச்சரிக்கை... 1 மில்லியன் மக்களை இழக்கலாம் News Lankasri
