இலங்கை பிரதமர் அமெரிக்க துணை ஜனாதிபதியை சந்தித்திருக்க வேண்டும்!
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த பரஸ்பர வரிகள் குறித்து விவாதிப்பதற்காக அண்மையில், இந்தியாவுக்கு சென்றிருந்த, அமெரிக்க துணை ஜனாதிபதி; ஜே.டி. வான்ஸை சந்திக்க இலங்கையின் பிரதமர் ஹரிணி அமரசூரிய முயன்றிருக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்பின் வரி
இந்தியாவில் இருக்கும் போது துணை ஜனாதிபதி வான்ஸுடன் குறைந்தபட்சம் ஒரு மணி நேர சந்திப்பை மேற்கொள்வதற்காக, பிரதமர் அமரசூரிய, இந்திய அரசாங்கத்தின் தலையீட்டை நாடியிருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஒரு நிகழ்வின் போது பேசிய முன்னாள் ஜனாதிபதி, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விதித்த வரிகள் உள்ளூர் நிறுவனங்களுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், எனவே பாதகமான தாக்கத்தைக் குறைக்க அரசாங்கம் அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை இலங்கை மற்றும் உள்ளூர் நிறுவனங்களுக்கு உதவியளிக்க தாம் தயாராக இருப்பதாக இந்தியப் பிரதமர் மோடி முன்னர் குறிப்பிட்டதை கோடிட்டுக்காட்டியுள்ள ரணில் விக்ரமசிங்க, எனவே அரசாங்கம் இந்த விடயத்தில் செயற்பாட்டை காட்ட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
