திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிரான இழப்பீடு வழக்கு! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக பிரதமர் ஹரிணி அமரசூரிய தாக்கல் செய்த வழக்கு தொடர்பான, பிரதிவாதியின் அறிக்கையை ஜூன் 03 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொழும்பு மாவட்ட நீதிபதி மகேஷா டி சில்வா தலைமையில் நேற்று (21) நடைபெற்ற விசாரணையின் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
குறித்த வழக்கில் 100 மில்லியன் இழப்பீட்டு திஸ்ஸ அத்தநாயக்கவிடம் கோரப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதிவாதி தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி, வழக்கில் முன் விசாரணை மனுவை தாக்கல் செய்த நிலையில், பதில் மனுவை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோரியுள்ளார்.
அதன்படி, ஜூன் 03 ஆம் திகதி பதில் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வழக்கின் பின்னணி
ஓகஸ்ட் 19, 2024 அன்று மாவனெல்லாவில் நடைபெற்ற கூட்டத்தில் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்த கருத்து தொடர்பிலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால், ஸ்ரீ தலதா மாளிகையில் ஊர்வலங்களை நடத்துவதை நிறுத்துவதாக அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக நடைபெற்ற கூட்டத்தில் இந்த கருத்து வெளியிடப்பட்டது.
இரண்டாவது பிரதிவாதி
மனுதாரரின் கூற்றுப்படி, இரண்டாவது பிரதிவாதியாக பெயரிடப்பட்ட தொலைக்காட்சி ஊடகமொன்று இந்த சம்பவத்தை ஒரு முக்கிய செய்தியாக ஒளிபரப்பி, மறுநாள் காலை செய்தித்தாளில் தலைப்புச் செய்தியாக மீண்டும் பிரசுருத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
திஸ்ஸ அத்தநாயக்கவும் மேற்படி , அவரின் கருத்தை ஒளிபரப்பிய தனியார் ஊடக நிறுவனத்திடமும் குறித்த இழப்பீடு கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |