விமான கொள்முதலில் ஊழல்! வாக்குமூலம் வழங்கிய இரகசிய சாட்சியாளி

Sri Lanka Economic Crisis Sri Lanka Law and Order
By Dharu Jan 22, 2025 06:12 AM GMT
Report

கடந்த 2013 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் செய்த ஏர்பஸ் விமான கொள்முதல் பரிவர்த்தனை தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஒரு இரகசிய சாட்சியாளி ஒருவர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.

குறித்த வழக்கானது நேற்று முன்தினம் (20.01.2025) இடம்பெற்றுள்ளது.

கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் சிறப்பு சாட்சிய விசாரணை சுமார் ஒரு மணி நேரம் பத்து நிமிடங்கள் நீடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள இலவச கூப்பன்கள்

தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள இலவச கூப்பன்கள்

இது தொடர்பில் இரகசிய சாட்சியாளியை மேற்கோள்காட்டி தென்னிலங்கை ஊடகம் ஒன்று பின்வருமாறு செய்தி வெளியிட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் துறை

குற்றப் புலனாய்வுத் துறையின் வேண்டுகோளின் பேரில் இரகசிய சாட்சியிடம் விசாரணை நடத்தப்பட்டு, பிற்பகல் 1.50 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விமான கொள்முதலில் ஊழல்! வாக்குமூலம் வழங்கிய இரகசிய சாட்சியாளி | Corruption Allegations Related Aircraft Purchases

இந்த வழக்கின் பின்னணியில் உள்ள முக்கிய குற்றச்சாட்டான, 6 ஏர்பஸ் ஏ-330 விமானங்கள் மற்றும் 8 ஏ-350 விமானங்களின் கொள்முதல் பரிவர்த்தனையில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் துறை நடத்திய விசாரணைகளின்படி, இந்த பரிவர்த்தனை தொடர்பாக இரண்டு மில்லியன் சிங்கப்பூர் டொலர் தரகுப்பணம் வழங்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

குற்றப் புலனாய்வுத் துறைக்கு, சட்டமா அதிபரால், டிசம்பர் 27, 2013 அன்று வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின்படி, ஏர்பஸின் தாய் நிறுவனம், சிங்கப்பூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றுக்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை வரவு வைத்துள்ளது.

யாருமே நெருங்க முடியாத ஈரானின் நிலக்கீழ் தளங்கள்: தகர்க்க விரும்பும் அமெரிக்காவின் அதிரடித் திட்டங்கள்!!

யாருமே நெருங்க முடியாத ஈரானின் நிலக்கீழ் தளங்கள்: தகர்க்க விரும்பும் அமெரிக்காவின் அதிரடித் திட்டங்கள்!!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்

அதில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவி நியோமாலி விஜேநாயக்க ஒரு இயக்குநராக இருந்ததாக கூறப்படுகிறது.

விமான கொள்முதலில் ஊழல்! வாக்குமூலம் வழங்கிய இரகசிய சாட்சியாளி | Corruption Allegations Related Aircraft Purchases

இதன்படி விசாரணைகள் மூலம் வெளிப்படுத்தப்பட்டதினபடி, குறித்த பணம் பின்னர் கபில சந்திரசேனவின் அவுஸ்திரேலியாவில் உள்ள வங்கிக் கணக்கிற்கு நான்கு சந்தர்ப்பங்களில் மாற்றப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் முன்னதாக.  இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க இருவரும் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US