ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவரை சந்தித்த பிரதமர் ஹரிணி
ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தலைவரும் அதன் பணிப்பாளர் சபையின் தவிசாளருமான மசாடோ கான்டாடை பிரதமர் ஹரிணி அமரசூரிய சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பானது நேற்றையதினம்(20) இடம்பெற்றுள்ளது. 56ஆவது உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஹரிணி அமரசூரிய சுவிட்சர்லாந்து சென்றுள்ளார்.
உலகப் பொருளாதார மன்றம்
சுவிட்சர்லாந்தின் டெவோஸ் – குளோஸ்டர்ஸ் நகரில் கடந்த (19) முதல் 23 ஆம் திகதி வரை உலகப் பொருளாதார மன்றத்தின் 56ஆவது வருடாந்த மாநாடு இடம்பெற்று வருகின்றது. “A Spirit of Dialogue” எனும் தொனிப்பொருளின் கீழ் உலகப் பொருளாதார மன்றம் – 2026 கூட்டப்பட்டுள்ளது.

இதில் அரச தலைவர்கள், முன்னனி பன்னாட்டு நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பப் புத்தாக்கச் சிந்தனையாளர்கள் உட்பட 3,000க்கும் மேற்பட்ட உலகளாவிய தலைவர்கள் ஒன்றிணைந்துள்ளனர்.
இந்த விஜயத்தின்போது, பிரதமர் சர்வதேச மட்டத்திலான முக்கிய தலைவர்கள், உலகளாவிய நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் ஏனைய முக்கியஸ்தர்களுடன் உயர்மட்ட இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri