புலம்பெயர் சமூகத்தினரை சந்தித்த பிரதமர் ஹரிணி
சுவிட்சர்லாந்தில் வசிக்கும் இலங்கை வர்த்தகர்கள் மற்றும் தொழில்சார் சமூகத்தினரை பிரதமர் ஹரிணி அமரசூரிய சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
சுவிட்சர்லாந்தின் டெவோஸ் – குளோஸ்டர்ஸ் நகரில் (19) முதல் 23ஆம் திகதி வரை நடைபெற்ற 56 ஆவது உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
கலந்துரையாடப்பட்ட விடயங்கள்
இச் சந்திப்பில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புதல், கூட்டுறவைப் பலப்படுத்துதல், இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் நீண்டகால அபிவிருத்திக்காகப் புலம்பெயர் சமூகத்தினர் பங்களிக்கக்கூடிய நடைமுறைச் சாத்தியமான வழிகளை ஆராய்தல் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.
அத்தோடு சுவிட்சர்லாந்து வர்த்தக சமூகத்தின் உறுப்பினர்களைச் சந்தித்து முதலீட்டு வாய்ப்புகள், சந்தை வாய்ப்பு மற்றும் பல்வேறு துறைகளுக்கிடையிலான ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும் இலங்கையின் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் மற்றும் நிலையான, தொலைநோக்குமிக்க, வெளிப்படைத்தன்மையுடனான பொருளாதாரக் கொள்கைகளின் மூலம் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.






உலகக்கிண்ணத்தில் விளையாட மறுக்கும் வங்காளதேசம்.,இணைந்த பாகிஸ்தான்? இலங்கைக்கு மாற்ற கூறும் வீரர் News Lankasri
கொண்டாட்டமான விஷயம், ஒன்று கூடி ஆட்டம் போட்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam