புதிய அரசியலமைப்பு உருவாக்கம்: பிரதமர் நாடாளுமன்றில் தெரிவித்த கருத்து
புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான முதல் கட்ட யோசனைகள் அடங்கிய அறிக்கை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பிரதமர் ஹரினி அமரசூரிய நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டுக்கான குறைநிரப்பு மதிப்பீடு தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டார்.
தொடர்ந்துரையாற்றிய அவர்,
அரசியலமைப்பு திருத்தம்
எதிர்க்கட்சி தலைவர் புதிய அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் தொடுத்திருந்த கேள்விக்கு பதலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்திருந்தார்.
தேர்தல் காலங்களில் முன்வைக்கப்பட்டிருந்த கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டிருந்தபடி புதிய அரசியலமைப்பை உருவாக்கி அது தொடர்பான விவாதங்கள் நடத்தப்பட்டு தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டு சர்வஜன வாக்கெடுப்பின் பின்னர் சட்டமாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

அதற்கான முதற் கட்ட நடவடிக்கையாக புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கைகள் மற்றும் ஏனைய அரசியலமைப்பில் ஏற்படுத்தப்படவுள்ள திருத்தங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது.
மேலும் புதிய அரசியலமைப்பு தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கைகள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri