கொழும்பு பிரபல பாடசாலையின் மோசமான காணொளி : பிரதமர் ஹரிணிக்கு எதிராக திசைதிருப்பும் சூழ்ச்சி..
கொழும்பின் பிரபல பாடசாலை மாணவர் ஒருவர் மற்றும் ஆசிரியர்களின் மோசமான செயற்பாடுகள் தொடர்பான காணொளி பிரதமர் ஹரிணி அமரசூரியவை இலக்கு வைத்து வெளியிடப்பட்டு தவறான ஒரு கருத்து உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தற்போது சமூகத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
குறித்த பாடசாலையின் சிரேஷ்ட மாணவத் தலைவர் ஒருவர் மற்றும் நான்கு ஆசிரியர்கள் தொடர்பில் பரப்பப்பட்டு வரும் செய்திகள் மற்றும் காணொளிகள் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
பிரதமர் ஹரிணிக்கு எதிரான செயற்பாடு
இந்நிலையில், பிரதமர் ஹரிணி அமரசூரிய கடந்த தினங்களில் குறித்த பாடசாலைக்கு சென்றிருந்தார். இவ்வாறு பிரதமர் சென்றிருந்த தினத்திலேயே இந்த காணொளி பகிரப்பட்டுள்ளது.
இதன் பின்னணியில் அரசியல் அரங்கில் பல விவாதங்கள் எழுந்துள்ளன. அதன்படி, ஹரிணி அமரசூரியவின் பயணத்தைத் தொடர்ந்து, இந்த காணொளி வெளியிடப்பட்டதை அடுத்து தற்போதைய அரசாங்கம் தொடர்பான விமர்சனங்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன.
இந்த சம்பவத்திற்கு முன்னதாக, புதிய கல்வி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்ட நிலையில், குறித்த மறுசீரமைப்பில் ஆறாம் தர பாடத்திட்டத்தில் காணப்பட்ட சர்ச்சைக்குரிய ஒரு விடயமும் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்த சர்ச்சை, கல்வி மறுசீரமைப்பை எதிர்வரும் ஆண்டிற்கு ஒத்திவைக்கும் அளவிற்கு பல பின்விளைவுகளை ஏற்படுத்தியது. இதேவேளை, நாட்டின் பிரதமரும், கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய மீது பல விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் முன்வைத்தன.
இவ்வாறான பின்னணியில், இந்தக் காணொளி வெளியாகியுள்ளமையும் தற்போதைய அரசாங்கத்தும், பிரதமருக்கும் எதிராக மீண்டும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது.
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam
மீண்டும் தள்ளிப்போகும் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ்.. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.. விஜய் ரசிகர்கள் அதிருப்தி Cineulagam