கல்வி சீர்திருத்தம்: எதிர்க்கட்சியின் நிலைப்பாட்டை திரிபுபடுத்தும் அரசு
ககல்வி சீர்திருத்தங்களை செயல்படுத்த எதிர்க்கட்சி அனுமதிக்காது என்பதை சமூகமயமாக்க அரசாங்கம் செயல்பட்டு வருகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா தொகுதி அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.தொடர்ந்துரையாற்றிய அவர்,
எதிர்க்கட்சியை குற்றஞ்சாட்டும் அரசு
கல்வி சீர்திருத்தங்கள் குறித்து மக்களுக்குத் தெரிவிப்பது நல்ல விடயம்.ஆனால் அரசாங்கம் எதிர்க்கட்சியைக் குறை கூறுகிறது. கல்வி சீர்திருத்தங்கள் தேவை என்று எங்கள் தரப்பு எப்போதும் கூறி வருகிறது.
கல்வி சீர்திருத்தங்கள் வேண்டாம் என்று கூறியது ஜே.வி.பி தான்.நாட்டிற்கு அறிமுகப்படுத்தப்படும் கல்வி சீர்திருத்தங்கள் மேம்பட்ட திருத்தங்களாக இருக்க வேண்டும்.
எதிர்காலத்திற்கு ஏற்ற சீர்திருத்தங்களைக் கொண்டுவர நாம் பாடுபட வேண்டும். பிள்ளைகள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை நாங்கள் எதிர்க்கவில்லை.

ஆனால் அவர்களுக்கு அந்த வசதிகளை வழங்க நாம் பாடுபட வேண்டும்.அவ்வாறான அடிப்படை வசதிகள் இல்லாமல் கல்வி சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதில் எந்த அர்த்தமும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 3 நாட்கள் முன்
இந்தியாவில் குவிய போகும் கோடிகள்; இந்தியா - ஐரோப்பா FTA ஒப்பந்தத்தில் எந்த துறைகளுக்கு லாபம்? News Lankasri