பிரதமர் ஹரிணிக்கு சார்பாக களத்தில் இறங்கியுள்ள பேராசிரியர்கள்
பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக நடத்தப்படும் வெறுப்பு பேச்சு மற்றும் அவதூறு பிரசாரங்களை நிறுத்துமாறு 58 பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் பிற துறைகளை சார்ந்த அறிஞர்கள் கையெழுத்திட்டு எதிர்ப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இலங்கைப் பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் டாக்டர் ஹரிணி அமரசூரிய மீது தொடுக்கப்படும் தீங்கிழைக்கும் அவதூறு பிரசாரம் மற்றும் தனிப்பட்ட தாக்குதல்கள் குறித்து அவர்களின் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது.
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள்
ஜனநாயகம் மேலோங்கியுள்ள சமூகத்தில் நாகரிகம் மற்றும் கண்ணியத்தின் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட இந்தத் தாக்குதல்கள் ஆழ்ந்த கவலையையும் அதிர்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் பெண்களுக்கு எதிரான வைராக்கியம், வெறுப்பு மற்றும் தீமையை அடிப்படையாகக் கொண்டவை என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர், ஏனெனில் பிரதமர் உள்ளூரிலும் சர்வதேச அளவிலும் மதிக்கப்படும் ஒரு பெண் அரசியல் தலைவராவார்.

பிரதமருக்கு எதிரான இந்த கொடூரமான தாக்குதல்களை இவர்கள் கடுமையாகக் கண்டித்துள்ளனர். மேலும் சமூகத்தின் மிகவும் பின்தங்கிய மற்றும் குறுகிய மனப்பான்மை கொண்ட கூறுகளால் தொடுக்கப்பட்டுள்ள இந்தப் பிரசாரங்களால் ஏமாற வேண்டாம் என்று பொது மக்களை வலியுறுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
ரஷ்யாவுடன் இறுகும் போர்... பிரித்தானிய இராணுவத்திற்கு 28 பில்லியன் பவுண்டுகள் நிதி பற்றாக்குறை News Lankasri