ரஞ்சனுக்காக ஜெனீவா விஜயம் செய்யும் ஹரீன்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்யும் நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ ஜெனீவாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.
நீதிமன்றை அவமரியாதை செய்த குற்றச்சாட்டின் பேரில் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு நான்கரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்து கொள்ளும் நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, எதிர்வரும் 28ம் திகதி ஜெனீவாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் ரஞ்சன் தொடர்பில் முறைப்பாடு ஒன்றை ஹரீன் செய்ய உள்ளார்.
ஹரீனுடன் அநேகமாக நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவும் இணைந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ரஞ்சனுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டால் தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குவதாக ஹரீன் பகிரங்கமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.