சஜித் பிரேமதாச இந்த நாட்டின் எதிர்காலத் தலைவர்: ஹரின் பெர்னாண்டோ
அமைச்சர் பதவிகளை ஏற்று புதிய அரசாங்கத்தில் இணைந்து கொள்வதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
"பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்தில் ஐக்கிய மக்கள் சக்தி அமைச்சர் பதவிகளை ஏற்க வேண்டும் என தாம் நம்புவதாகவும் இது குறித்து கட்சி முடிவு எடுக்கும் வரை இன்னும் ஒரு நாள் பொறுத்திருப்பேன்" எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.
"சஜித் பிரேமதாச இந்த நாட்டின் எதிர்காலத் தலைவர், அதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் இந்த தருணத்தில் நாம் அரசியலைப் பற்றி சிந்திக்காமல் புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
இன்னும் ஆறு மாதங்களில் எமக்கு ஒரு நாடு இருக்காது, இந்த நெருக்கடியை தீர்க்க இந்த புதிய அரசாங்கத்தில் சஜித் பிரேமதாசவும் , அனுரகுமார திஸாநாயக்கவும் இணைவதை தான் விரும்புவதாகவும்”அவர் தெரிவித்துள்ளார்.
"Gota Go Home போராட்டத்தின் கோரிக்கையை உள்ளடக்கிய ஏழு அம்சங்களுடன் நாங்கள் பிரதமருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளோம், நேர்மறையான பதில் கிடைத்தவுடன் நாங்கள் ஒரு முடிவை எடுப்போம், இதில் நான் தனியாக இல்லை" எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri

பங்கர் பஸ்டராக உருவெடுக்கும் இந்தியாவின் அக்னி ஏவுகணை - சீனா, பாகிஸ்தானுக்கு கடும் அச்சுறுத்தல் News Lankasri
