யாழில் நடைபெற்ற ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குழப்பநிலை
புதிய இணைப்பு
யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு இடம்பெற்ற ஹரிஹரனின் இசைநிகழ்ச்சியில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வை பார்வையிட வருகைத்தந்திருந்த ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் கட்டுப்பாடுகளை மீறி தடுப்புகளை உடைத்துக்கொண்டு சென்றதால் அங்கு சனநெருக்கடி ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதன்போது ஒருவர் மயக்கமடைந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து பொலிஸார் நிலைமையை கட்டுப்படுத்தியுள்ளதுடன், குறித்த இசைநிகழ்ச்சி சில நிமிடங்களில் இடைநிறுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
யாழில் நடைபெற்று வரும் தென்னிந்திய பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி சற்று நேரம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் முன்னணி பாடகர்கள் மற்றும் திரைப்பட பிரபலங்கள் பங்குபற்றும் குறித்த நிகழ்ச்சி யாழ்.முற்றவெளி மைதானத்தில் இன்று (09.02.2024) நடைபெற்றுள்ளது.
ஏற்பாட்டு குழுவினரின் அறிவிப்பு
இதன்போது இசை நிகழ்ச்சியை பார்வையிட வந்த மக்கள் தடுப்புகளை உடைத்துக்கொண்டு சென்றதால் அங்கு சனநெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதனால் நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவினர் ரசிகர்களை சற்று நிதானத்துடன் நடந்துகொள்ளுமாறு நிகழ்ச்சியின் இடைநடுவில் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து ஏற்பட்ட குழப்ப நிலையை பொலிஸார் கட்டுப்படுத்தும் வரையில் இசை நிகழ்ச்சியானது சில நிமிடங்கள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







கூலி படத்தில் தரமான நடித்து அசத்திய சௌபின் இப்படத்திற்காக வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா? Cineulagam

பசங்க பட நடிகர் ஜீவாவா இது, இப்போது அவர் ஒரு பிரபல கம்பெனியின் CEO... இந்த விஷயம் தெரியுமா? Cineulagam
