எரிபொருள் நெருக்கடி அதிகரித்தால் கொழும்பு துறைமுகத்தின் பணிகளும் பாதிக்கும்
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி மேலும் அதிகரித்தால், கொழும்பு துறைமுகத்தில் உள்ள இயந்திரங்களை இயக்குவதிலும் சிக்கல்கள் ஏற்படும் என அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
அப்படியான நிலைமை ஏற்பட்டால், துறைமுகத்தின் பணிகளை முன்னெடுத்துச் செல்வதில் தடையேற்படும் எனவும் அப்போது நாடு மேலும் வங்குரோத்து நிலைமைக்கு செல்வதை தவிர்க்க முடியாது போகும் என அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டில் காணப்படும் எரிபொருள் பிரச்சினை, டொலர் கையிருப்பில் இல்லாமை, அரசியல் ஸ்திரமின்மை போன்ற காரணங்களினால், உலகில் முன்னணி கப்பல் நிறுவனங்களின் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வருவது குறைந்துள்ளதை காணக் கூடியதாக உள்ளது எனவும் அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம் கூறியுள்ளது.

பேச்சுலர் வாழ்க்கைக்கு குட் பாய் சொல்லும் நடிகர் பிரபாஸ்- மனைவிக்காக என்ன செய்துள்ளார் பாருங்க... Cineulagam
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
மிகப்பெரிய நபரை குளிப்பாட்டி, கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை ஷோபனா... வீடியோ இதோ Cineulagam