எரிபொருள் விநியோகம் தொடர்பில் ஜனாதிபதி சற்றுமுன் விடுத்துள்ள உத்தரவு
எரிபொருள் விநியோகம் தொடர்பில் முக்கிய உத்தரவொன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிறப்பித்துள்ளார்.
எரிபொருள் விநியோகம்
அதன்படி தற்போது இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் கையிருப்பில் உள்ள எரிபொருளை நாடு முழுவதும் உள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் விநியோகிக்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று முற்பகல் இடம்பெற்ற பெற்றோல், டீசல் மற்றும் எரிவாயு விநியோகம் மற்றும் இறக்குமதி தொடர்பான விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அத்துடன் நிதியமைச்சு, மத்திய வங்கியுடன் இணைந்து அரச மற்றும் தனியார் வங்கிகளின் ஒத்துழைப்புடன், போதியளவு எரிபொருளை கோருவதற்கு வசதியளித்து, நாணயக் கடிதங்களை திறக்க திட்டம் வகுக்க வேண்டுமென ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.
பொதுப்போக்குவரத்திற்கு முன்னுரிமை
எரிபொருள் விநியோகத்தின்போது, பொதுப்போக்குவரத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான நிரப்பு நிலையங்களில், தனியார், சுற்றுலா பேருந்துகள் மற்றும் பாடசாலை போக்குவரத்து வாகனங்களுக்கு பொலிஸாரின் கண்காணிப்பில் எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
ஏனைய அத்தியாவசிய சேவைகளுக்காக தெரிவுசெய்யப்பட்ட எரிபொருள் நிலையங்களில் தொடர்ச்சியாக எரிபொருள் வழங்குவதற்காக இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரை பாதுகாப்பில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேவையற்ற வகையில் எரிபொருளை சேமித்து வைப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் தற்போது கைவசமுள்ள எரிவாயுவை முறையாக விநியோகிப்பதற்கும், தேவையான அளவு எரிவாயுவை விரைவாக கோருவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.




இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam