மாணவனை தகாத முறைக்கு உட்படுத்திய பெண் கைது!
கற்பிட்டி - கண்டக்குளி, கரையோர பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் 14 வயதுடைய மாணவன் ஒருவனை தகாத முறைக்கு உட்படுத்தியதாக கூறப்படும் பெண்ணொருவரை கற்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவன் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, சந்தேகநபரான பெண்ணை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் மாணவர் மருத்துவ பரிசோதனைக்காக கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலதிக விசாரணை
கண்டக்குளி பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபரான பெண்ணை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam
