மொட்டு வேட்பாளர் நாமலுக்கு ஆதரவு திரட்டி 120 பிரதான கூட்டங்கள்
சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு(Namal Rajapaksa) ஆதரவு திரட்டும் வகையில் பிரதான 120 கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று இலங்கைக்கான ரஷ்யாவின் முன்னாள் தூதுவரும் ராஜபக்ச குடும்ப உறுப்பினருமான உதயங்க வீரதுங்க தெரிவித்தார்.
இதில் 40 கூட்டங்களில் மகிந்த ராஜபக்ச கலந்துகொள்வார் எனவும், முதலாவது பிரசாரக் கூட்டம் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது எனவும் அவர் கூறினார்.
தேர்தல் களம்
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், "ஜனாதிபதித் தேர்தல் களத்தில் தற்போதைய சூழ்நிலையில் சஜித் பிரேமதாஸவே முன்னிலையில் உள்ளார். நாமல் ராஜபக்சவுக்கு சஜித்துடன்தான் போட்டி உள்ளது.

தேர்தல் பிரசாரம் ஆரம்பமான பின்னர் சஜித்தையும் அவர் முந்துவார். நாமல் ராஜபக்ச களமிறங்கியுள்ளதால் ரணில் விக்ரமசிங்க அச்சத்தில் உள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர் பக்கம் சென்றிருந்தாலும், மக்கள் மொட்டுக் கட்சியுடன்தான் உள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
பிரான்ஸ் அருங்காட்சியக திருட்டில் பயன்படுத்தப்பட்ட கிரேன்., விளம்பரம் செய்த ஜேர்மன் நிறுவனம் News Lankasri
தீவிரமடையும் போர்... உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலை கரீபியனுக்கு அனுப்பிய ட்ரம்ப் News Lankasri