யுக்திய என்ற போர்வையில் மக்களை துன்புறுத்தும் நடவடிக்கை : வெளியான தகவல்
போதைப்பொருளுக்கு எதிராக நாடு முழுவதிலும் பொலிஸார் மேற்கொண்டு வரும்“ யுக்திய”
நடவடிக்கைகளின் போது இடம்பெற்றதாக கூறப்படும் சித்திரவதை ஒன்று தொடர்பில்
தகவல்கள் வெளியாகியுள்ளன.
2024 ஜனவரி 3ஆம் திகதியன்று கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று பொலிஸாரால் நிறுத்தப்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டியின் சாரதியை முதலில் விசாரணை செய்த பொலிஸ் அதிகாரிகள், பின்னர் அதில் பயணித்த ஒரு இளைஞனையும் யுவதியையும் விசாரித்துள்ளனர்.

பொலிஸாரின் அநாகரீக செயற்பாடு
இந்தநிலையில் குறித்த இருவரும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் அங்கு இளைஞர் உடல் ரீதியான துன்புறுத்தப்பட்டதாக அவரின் தந்தையான ஜெரால்ட் சேரம் என்பவர் சமூக ஊடகங்கள் மூலம் தகவல்களை பகிர்ந்துள்ளார்.
இந்த தகவலின்படி, தமது மகனின் காற்சட்டையை முதலில் பொலிஸார் கழற்றுமாறு கூறியுள்ளதுடன் அணிந்திருந்த உள்ளாடையையும் கழற்றுமாறு பலவந்தப்படுத்தியுள்ளனர்.

இதன்போது தமது மகனின் காற்சட்டைப் பையில் இருந்த கத்தரிக்கோலில் ஹசீஸ் போதைப்பொருளின் வாசம் வீசியமை தொடர்பிலேயே அவர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் தமது மகன் நகங்களை வெட்டுவதற்காக எப்போதும் தமது காற்சட்டை பையில் கத்தரிக்கோலை வைத்திருப்பது வழக்கம் என்று தந்தையான ஜெரால்ட் கூறியுள்ளார்.

கத்தரிக்கோலில் ஹசீஸ் வாசம் வருவதாக பொலிஸார் கூறினால், ஏன் அதனை இரசாயனப் பகுப்பாய்வுக்கு அனுப்பவில்லை என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தநிலையில் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை குற்றம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்று இலங்கையின் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan