மருத்துவப் பயிற்சியாளர்களைத் துன்புறுத்துவதைத் தவிர்க்க வேண்டும்: மருத்துவ நிபுணர்கள் சங்கம்
அண்மைக் காலங்களில் மருத்துவ அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் மீது சுகாதார அமைச்சரும், அதிகாரிகளும் முன்வைக்கும் விடயங்களை மருத்துவ நிபுணர்கள் சங்கம் கண்டித்துள்ளது.
இதில் ஒரு நடவடிக்கையாக, சுகாதார அமைச்சின் சில உயர் அதிகாரிகள், பதவி விடுமுறையில் சேவை செய்துள்ள மருத்துவ பயிற்சியாளர்களின் பதிவை ரத்து செய்யுமாறு, மருத்துவ சபைக்கு அறிவுறுத்தியுள்ளனர் என மருத்துவ நிபுணர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
சுகாதார அமைச்சு தனது அதிகாரத்தை மீறி நியாயமற்ற மற்றும் சட்டவிரோதமான செயலில் ஈடுபட்டுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
கோரிக்கை
இது ஒரு குறிப்பிட்ட மருத்துவர் குழுவை துன்புறுத்துவதற்காக இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
எனவே, இதுபோன்ற விடயங்களை உடனடியாக திரும்பப் பெறவும், மருத்துவப்
பயிற்சியாளர்களைத் துன்புறுத்துவதைத் தவிர்க்கவும் சுகாதார அமைச்சக அதிகாரிகளிடம் மருத்துவ நிபுணர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.





அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam
