ஹரக் கட்டாவுக்கு உதவி புரிந்த பொலிஸ் கான்ஸ்டபிள் தொடர்பில் வெளியான தகவல்
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிடியில் இருந்து தப்பிச் செல்ல ‘ஹரக் கட்டா’ என அழைக்கப்படும் நடுன் சிந்தக விக்ரமரத்ன மேற்கொண்ட தோல்வி முயற்சிக்கு உதவியதாகக் கூறப்படும், பொலிஸ் கான்ஸ்டபிள் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுள்ளதாக நம்பப்படுகிறது.
இதன்படி, அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (10.09.2023) இரவு திருகோணமலை, சேருவிலவில் உள்ள தனது வீட்டிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தாம் பாதுகாப்பாக வேறொரு நாட்டில் இருப்பதாக கூறியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகள் விளையாட்டையும் அரசியலையும் வேறுவேறாக பார்த்தார்கள்! முத்தையா முரளிதரன் பகிரங்க தகவல்
தற்காலிக இடமாற்றம்
இதேவேளை பொலிஸ் கான்ஸ்டபிளாகப் பணிபுரியும் சந்தேகநபரின் நண்பியும் ‘ஹரக் கட்டா’ தொடர்பில் அறிந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதற்கிடையில் 'ஹரக் கட்டா' காவலில் இருந்து தப்பிக்க முயன்று தோல்வியடைந்த நாளில் விசாரணை நடத்திய எட்டு குற்றப்புலனாய்வு அதிகாரிகள், தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





சீனா, ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி... துருக்கி உருவாக்கும் கொடிய ஆயுதம்: இந்தியாவிற்கு கெட்ட செய்தி News Lankasri
