ஹரக் கட்டா விவகாரம்: தப்பிச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிளின் தாய் கைது
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிடியில் இருந்து ஹரக் கட்டா தப்பிச் செல்ல உதவியதாக சந்தேகிக்கப்படும் பொலிஸ் கான்ஸ்டபிளின் தாயாரையும், மற்றுமொரு நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.
பொலிஸ் ஊடகப்பிரிவு தகவல்
இதேவேளை, சந்தேகத்திற்குரிய பொலிஸ் கான்ஸ்டபிளின் காரும் மாத்தறை பிரதேசத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், கைது செய்யப்பட்டுள்ள மற்றைய நபர் கான்ஸ்டபிளின் சகோதரியின் கணவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த குற்றச்செயலுடன் கைதான இருவரும் உதவியுள்ளமை தெரியவந்துள்ளதை தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan