தனது படைப்பை அமெரிக்க தூதுவர் ஒரு நாளுக்குள் வாசித்ததில் மகிழ்ச்சி : விமல் வீரவன்ச
அமெரிக்கத் தூதுவர் தனது நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ஒரு நாளுக்குள் தனது படைப்பை வாசித்தது மகிழ்ச்சியளிக்கிறது.என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தனது புத்தகத்தை 'புனைவு' என்று கூறியதற்குப் பதிலளிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் விமல் வீரவன்சவின் நூலில் அமெரிக்காவுக்கு எதிரான கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அந்த குற்றச்சாட்டுக்களை ஜூலி சங் ஏற்கனவே மறுத்திருந்தார்.
அமெரிக்காவுக்கு எதிரான கருத்து
இதேவேளை வீரவங்சவின் நூலில் பொன்சேகாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை கடுமையான முறையில் கண்டித்து பேசியுள்ளார்.
அதாவது 'இராணுவத் தளபதிகள் மீது சேறு பூச வேண்டாம். என்றும் விமல் வீரவன்ச அமைச்சுப்பதவியைப் பெற முயற்சிக்கிறார்' என்றும் பொன்சேகா குற்றம் சுமத்தினார்.
எனினும் இதற்கு பதிலளித்த வீரவன்ச தனது பிரசுரத்தின் மூலம் சதித்திட்டத்தின்
உண்மை வெளிவருவதால் பொன்சேகா வேதனைப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அமெரிக்கத் தூதுவர் மற்றும் சரத்பொன்சேகாவின்
கட்டுப்பாட்டில் தான் இருந்தார் என வீரவன்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.