பிரித்தானிய மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!
பிரித்தானியாவில் அமுலில் உள்ள அனைத்து கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளும் நீக்கப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஒமிக்ரோன் தொற்று வேகமாக பரவும் போதிலும் எதிர்வரும் 10 நாட்களில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரித்தானிய அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகளை மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியாகியுள்ளது.
அதற்கமைய, ஜனவரி இறுதிக்குள் இந்த நடவடிக்கைகள் நீக்கப்பட்டால், பாடசாலைகள், பொதுப் போக்குவரத்து மற்றும் உட்புற நிகழ்வுகளில் கட்டாய முகக் கவசம் அணியும் நடைமுறை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் வீட்டிலிருந்து பணிபுரியும் நடைமுறையும் எதிர்வரும் ஜனவரி 26ஆம் திகதியுடன் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எப்படியிருப்பினும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் ஐந்து நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்ற நடைமுறை அமுலாகும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த ஒரு மாதங்களின் பின்னர் பிரித்தானியாவில் சற்று கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், இம்மாத இறுதியில் கட்டுப்பாடுகள் தேவைப்படாது என பிரித்தானிய சுகாதார செயலாளர் சஜிட் ஜாவிட் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரித்தானியாவில் நேற்றைய தினம் 81,713 பேர் புதிதாக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இது பிரித்தானியாவில் கடந்த ஒரு மாதத்தில் பதிவான மிகக் குறைவான தினசரி பாதிப்பு எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.