வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
இலங்கையில் வீடு அல்லது வீடு ஒன்றை நிர்மாணிப்பதற்கு காணி இல்லாமல் வாடகை அடிப்படையில் வாழும் குடும்பத்திற்கு நிரந்தர வீடு ஒன்றை வழங்குவதற்கான திட்டம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய நடுத்தர வருமானம் ஈட்டுவோருக்கு மலிவு விலையில் வீட்டு திட்டம் ஒன்றை ஆரம்பிக்க தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்காக தெரிவு செய்யப்படுபவர்களுக்கு முற்கொடுப்பனவாக 500000 ரூபாய் செலுத்த கூடிய வசதி இருக்க வேண்டும்.
வீட்டின் பெறுமதிக்கமைய மேலதிக பணத்தை வருடத்திற்குள் தவணை முறையில் அறிவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அவசியமானவர்களுக்கு வங்கி மூலம் கடன் பணம் பெற்றுக் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான ரணபொகுணகம காணியில் 72 வீட்டுத் தொகுதிகள் நிர்மாணிக்கப்பட உள்ளதென தகவல் வெளியாகியுள்ளது.
அணையா விடுதலைத்தீ சங்கரின் சாவு எப்படி வீரசரித்திரமானது.. 13 மணி நேரம் முன்
பள்ளி செல்லும் அகதிப் பிள்ளைகளை தங்கள் நாட்டுக்கு போகும்படி கூறுவதால் உருவாகியுள்ள கலக்கம் News Lankasri
அவுஸ்திரேலியா அணிக்காக சதமடித்த முதல் இந்தியர்! 184 பந்துகளில் 163 ஓட்டங்கள்..சிட்னியில் ருத்ர தாண்டவம் News Lankasri