தமிழ்வின் வாசகர்களுக்கு புத்தாண்டு 2021 நல்வாழ்த்துக்கள்
2020ம் ஆண்டை கடந்து மலர்ந்திருக்கும் இனிய புத்தாண்டில்(2021) வாசகர்கள் அனைவருக்கும் தமிழ்வின் இணைய குழுமம் உளங்கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது.
இன்று மலர்ந்துள்ள இந்த 2021 புத்தாண்டில் தமிழ்வின் இணையத்தள வாசகர்கள் அனைவரும் சகல செல்வங்களும் பெற்று சிறப்புடன் வாழ வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
பிறந்திருக்கும் 2021 ஆம் ஆண்டு அனைவரும் நோய்நொடி இன்றி ஆரோக்கியமாக வாழ அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
உலகமே மிகவும் முக்கியமானதொரு அபாயத்தினை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கும் இந் நிலையில் பல உயிரிழப்புக்களை சந்தித்துக்கொண்டிருக்கும் பலரது மத்தியிலும், இனிவரும் நாட்களேனும் இனிதே அமைய வேண்டி இம்முறை புத்தாண்டு வாழ்த்துக்களைத் எமது வாசக அன்புள்ளங்களுக்கு தெரிவிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
இருப்பினும், இந்தப் புத்தாண்டினை சுகாதார ரீதியான எச்சரிக்கைகள் மற்றும் சிபார்சுகளுக்கு உட்பட்ட வகையிலேயே கொண்டாட வேண்டிய அவசியமுள்ளது.
பொதுமக்களின் சுகாதார நலனை கருத்திற்கொண்டு விதிக்கப்பட்ட சட்டதிட்டங்கள் மற்றும் தடைகளை புத்தாண்டு நாட்களிலும், தொடர்ந்துவரும் நாட்களிலும் கடைப்பிடிப்பது நமக்கும், நம்மைச் சுற்றியிருப்போருக்கும் ஆரோக்கியம் என்பதனை நினைத்து புத்தாண்டை வரவேற்போமாக.
எனவே எதிர்வரும் ஆண்டினை உற்றார், சுற்றத்தவர்களோடு சேர்ந்தே இனிதே கொண்டாடவேண்டும் என்ற பிரார்த்தனையோடு, இம்முறை 2021ம் புத்தாண்டினை எளிமையாகவும், ஆடம்பரமின்றியும் உங்களது குடும்ப அங்கத்தவர்களுடன் மட்டும் கொண்டாடுங்கள்.
உலக நாடுகளும், எமது நாடும், மக்களும் முகம்கொடுத்துள்ள இந்த நோய்த் தொற்று பிரச்சினையை வெற்றிகொள்வதற்கு உறுதியுடன் இப் புத்தாண்டில் மனதார பிரார்த்தனை செய்துகொள்வோம்.
மீண்டும் எமது அனைத்து வாசகர்களுக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் தமிழ்வின் இணைய குழுமம் பெருமை கொள்கின்றது.
வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!