இயேசு பாலகனின் பிறப்பை கொண்டாடும் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்

Christmas 2023 World
By Dharu Dec 24, 2023 08:36 PM GMT
Report

‘இந்த விழா ஆண்டுக்கு ஒருமுறை தானே வருகிறது. இரண்டு, மூன்று முறை வரக் கூடாதா?’ என்ற ஏக்கம் எதிரொலிக்கும் பிரபலமான ஆங்கில வாசகம் ஒன்று இருக்கிறது.

‘கிறிஸ்துமஸ் கம்ஸ், பட் ஒன்ஸ் எ இயர்’. ஆமாம், கிறிஸ்துமஸ் பண்டிகை ஓர் ஆண்டில் ஒருமுறைதான் வருகிறது.

உலகெங்கும் உள்ள 240 கோடிக் கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல, மற்ற சமயங்களைச் சார்ந்த மக்களும் இணைந்து மகிழ்ந்து கொண்டாடும் பெருவிழாவாக கிறிஸ்துவின் பிறப்புவிழா காணப்படுகிறது.

நத்தார் கொண்டாட்டத்தில் சிறந்த மாற்றங்கள் கிடைக்கும்: ஜனாதிபதியின் நத்தார் தின வாழ்த்து

நத்தார் கொண்டாட்டத்தில் சிறந்த மாற்றங்கள் கிடைக்கும்: ஜனாதிபதியின் நத்தார் தின வாழ்த்து

கிறிஸ்து பிறப்பு விழா

மேலை நாடுகளில் வாழாவிட்டாலும் இந்த விழாக் காலத்தின்போது, இந்த விழாவைச் சார்ந்த கொண்டாட்டங்களும், அவை உருவாக்கும் களிப்பும் பேரானந்தமும் அனைவரும் அறிந்ததாக காணப்படும்.

இயேசு பாலகனின் பிறப்பை கொண்டாடும் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள் | Happy Christmas Wishes 2023

கிறிஸ்துமஸ் அல்லது கிறிஸ்து பிறப்பு விழா, கிறிஸ்தவர்களால் ஆண்டுதோறும் டிசம்பர் 25ம் திகதி கொண்டாடப்படுகிறது.

இதனை பெரும்பாலான கிறிஸ்தவர்கள் பின்பற்றுகின்றனர். அதேசமயம், கிழக்கு மரபு வழி திருச்சபைகளைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள், ஜனவரி 7ஆம் திகதியை கிறிஸ்துமஸ் பண்டிகையாகக் கொண்டாடுகின்றனர்.

மேலும், கிறிஸ்துமஸ் என்பது ஒரு மரபு வழிக் கொண்டாட்டம் என்றும், அது இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாள் இல்லை என்றும் ஒரு செவி வழிச் செய்தி உலாவுகிறது.

டிசம்பர் 24ஆம் திகதி நள்ளிரவு கிறிஸ்தவர்கள் அனைவரும் உலகம் முழுவதும் உள்ள பேராலங்களில் சென்று சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கமாகும்.

இலங்கையின் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் விசேட பாதுகாப்பு

இலங்கையின் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் விசேட பாதுகாப்பு

வாண வேடிக்கைகளும், கலை நிகழ்ச்சிகளும்

நள்ளிரவு திருப்பலியில் நற்கருணை விருந்தும் நடத்தப்படும். இதையொட்டி, கிறிஸ்தவர்களின் வீடுகள் மற்றும் பேராலயங்களிலும் கிறிஸ்து அவதரித்ததன் அடையாளமாக, நாணல் போன்ற புல்லினால் குடில் கட்டி, குழந்தை இயேசு மரியாள், யோசேப்பு, இடையர்கள், ஞானிகள் செரூபங்களை வைப்பார்கள்.

இயேசு பாலகனின் பிறப்பை கொண்டாடும் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள் | Happy Christmas Wishes 2023

விண்மீனுக்கு அடையாளமாக காகிதத்திலான விண்மீண்களை வண்ண விளக்குகளால் அலங்கரிப்பார்கள்.

கிறிஸ்தவர்களின் வீடுகளில் விருந்து நடைபெறும். எல்லாரும் புத்தாடை அணிவார்கள். நண்பர்கள், உறவினர்களையும் அழைத்து, உபசரிப்பார்கள்.

இரவில் வாண வேடிக்கைகளும், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவது உண்டு. ஒருசிலர் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து, குழந்தைகள் உள்பட பல தரப்பினருக்கும் பரிசுப் பொருட்களை வழங்கி, வாழ்த்துவதும் உண்டு.

2024 ஆம் ஆண்டு அதிகரிக்கப்படவுள்ள வற் வரி: கடும் நெருக்கடியில் பொதுமக்கள் (Video)

2024 ஆம் ஆண்டு அதிகரிக்கப்படவுள்ள வற் வரி: கடும் நெருக்கடியில் பொதுமக்கள் (Video)

லங்காசிறியின் குழுமத்தின் நல்வாழ்த்துக்கள்

பல இடங்களில் கிறிஸ்துமஸ் பஜனை நடைபெறும். அப்போது, இசைக் குழுவினர் அணியாகச் சென்று வீடுகள்தோறும் தேவ கீர்த்தனைகளைப் பாடுவார்கள்.

இயேசு பாலகனின் பிறப்பை கொண்டாடும் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள் | Happy Christmas Wishes 2023

மேலும், கிறிஸ்துமஸ் பண்டிகை கிறிஸ்துவர்களுக்கு மட்டுமின்றி, உலக மக்கள் அனைவருக்குமே ஒரு உற்சாகமான பண்டிகையாகவே உள்ளது.

மதங்களை கடந்த ஒற்றுமையின் சின்னமாக, கிறிஸ்துமஸ் விளங்குகிறது என்பதில் ஐயமில்லை.

இயேசு பாலகனின் பிறப்பை கொண்டாடும் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள் | Happy Christmas Wishes 2023

அந்த வகையில் உலகவாழ் தமிழ் வாசகர்கள் அனைவருக்கும் லங்காசிறியின் குழுமத்தின் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US