ஹோண்டியஸ் சுற்றுலா கப்பலில் ஹன்டா வைரஸ் தொற்று! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
ஆர்ஜென்டினாவிலிருந்து புறப்பட்ட எம்.வி ஹோண்டியஸ் (MV Hondius) சுற்றுலா கப்பலில், ஹன்டா வைரஸ் தொற்று பரவியுள்ள நிலையில், அதிலிருந்து முன்னதாகவே வெளியேறிய இரு பிரித்தானியர்கள் தற்போது தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
சென்.ஹெலினா (St Helena) தீவில் கப்பலை விட்டு இறங்கிய இவர்கள், ஜொகன்னஸ்பர்க் வழியாக பிரித்தானியா திரும்பியுள்ளனர்.
கப்பலில் வைரஸ் பாதிப்பு இருப்பதை அறிந்தவுடன் அவர்கள் அதிகாரிகளைத் தொடர்பு கொண்ட நிலையில், தற்போது அறிகுறிகள் ஏதுமின்றி சுய தனிமைப்படுத்தலில் உள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இவர்களுடன் பயணத்தின் போது தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறியும் பணியில் சர்வதேச சுகாதார அமைப்புகளுடன் இணைந்து பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு முகவரகம் (UKHSA) ஈடுபட்டுள்ளது.
இதற்கிடையில், தற்போது கப்பலில் இருக்கும் மற்ற பிரித்தானியப் பயணிகள், அறிகுறிகள் இல்லாத பட்சத்தில் கேனரி தீவுகளில் (Canary Islands) இருந்து சிறப்பு விமானம் மூலம் தாயகம் அழைத்து வரப்பட உள்ளனர்.

அவர்கள் வைரஸ் பாதிப்பு காலத்தைப் பொறுத்து ஆறு வாரங்கள் வரை தனிமைப்படுத்தப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுவது மிகவும் அரிது என்பதால், பொதுமக்களுக்குப் பெரிய அளவில் ஆபத்து இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் உறுதியளித்துள்ளது.
இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பயணிகளைக் கண்காணிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், ஆர்ஜென்டினாவிலிருந்து ஒரு மாதத்திற்கு முன்பு புறப்பட்ட எம்.வி ஹோண்டியஸ் (MV Hondius) என்ற சுற்றுலா கப்பலில் ஹான்டாவைரஸ் (Hantavirus) தொற்று பரவியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த வைரஸ் பாதிப்பால் கப்பலில் பயணம் செய்த மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது வரை மொத்தம் எட்டு பேருக்கு (3 உறுதிப்படுத்தப்பட்டவை, 5 சந்தேகிக்கப்படுபவை) தொற்று இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) தெரிவித்துள்ளது.
இந்த வைரஸின் தோற்றம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், பொதுவாக ஒரு மனிதரிடமிருந்து மற்றொருவருக்கு இந்த வகை வைரஸ் பரவுவது அரிது என்று சுகாதார நிபுணர்கள் விளக்குகின்றனர்.
இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பாதிப்பு கண்டறியப்படுவதற்கு முன்பே கப்பலில் இருந்து இறங்கிச் சென்ற பயணிகளைக் கண்டறியும் பணிகளில் பிரித்தானியா, சுவிட்சர்லாந்து மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam