புதிய சாதனை படைத்த பளு தூக்கும் இலங்கை வீரர்
உலக பளுதூக்கும் செம்பியன்ஷிப் போட்டியில் ஹன்சானி கோமஸ் புதிய இலங்கை சாதனையை நிகழ்த்தினார்.
இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 49 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்ட ஹன்சானி கோமஸ், ஸ்னாட்ச் முறையில் 76 கிலோ எடையை தூக்கி புதிய இலங்கை சாதனையை நிகழ்த்தினார்.
தாய்லாந்தில் உலக பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது, இது ஒலிம்பிக் தகுதிப் போட்டியாகவும் அமைகிறது.
உலக பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டி
இதேவேளை, 55 கிலோ எடைப் பிரிவில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய திலங்க இசுரு குமார 5 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
இவர் ஸ்னாட்ச் முறையில் 112 கிலோவும், கிளீன் அன்ட் ஜெர்க் முறையில் 145 கிலோவும் தூக்கினார்.
இதன் அடிப்படையில், திலங்க தூக்கிய மொத்த எடை 247 கிலோவாகும். இது அவரது தனிப்பட்ட சிறந்த பதிவாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 4 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam
