கொழும்பில் கைவிடப்பட்ட கட்டடம் ஒன்றிலிருந்து கைக்குண்டு மீட்பு
கொழும்பு - தெஹிவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கைவிடப்பட்ட கட்டடம் ஒன்றிலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரால் இன்று (06) காலை முன்னெக்கப்பட்ட சோதனையின் போதே கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸ் விசாரணை
குறித்த கைக்குண்டானது தெஹிவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இலக்கம் 124, அனகாரிக தர்மபால மாவத்தை, தெஹிவளை என்ற முகவரியில், பாதி கட்டப்பட்டு கைவிடப்பட்டுள்ள 11 மாடி கட்டடத்தின் 5 ஆவது மாடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தெஹிவளை பொலிஸ் நிலையத்திற்கு நீல நிற பொலித்தீன் பையில் பொதி செய்யப்பட்ட கைக்குண்டு போன்ற ஒன்று இருப்பதாக குறித்த கட்டடத்தின் பாதுகாப்பு அதிகாரியினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பி்ல் தெஹிவளை பொலிஸ் நிலையம் கைக்குண்டு செயலிழப்பு பிரிவினருக்கு அறிவித்ததை அடுத்து, பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கைக்குண்டு செயலிழப்பு பிரிவினரால் கைக்குண்டு எடுத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam