மட்டக்களப்பில் பொது மயானமொன்றில் கைக்குண்டு மீட்பு
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொது மயானத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டு ஒன்றை விசேட அதிரடிப்படையினர் தோண்டி எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைக்குண்டை நேற்று (15) தோண்டி எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தேசிய புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து விசேட அதிரடிப்படையினர் அந்த பகுதியை தோண்டுவதற்காக நீதிமன்ற கட்டளை ஒன்றை பெற்றனர்.
நீதிமன்ற அனுமதி
இதனையடுத்து நேற்று விசேட அதிரடிப்படை குண்டுகள் செயலிழக்கும் விசேட பிரிவினர் மற்றும் பொலிஸார் குறித்த மயானத்தில் தோண்டுதல் நடவடிக்கையினை மேற்கொண்ட நிலையில் அங்கிருந்து ஒரு கைக்குண்டு ஒன்றை மீட்டுள்ளனர்.
இதனை வெடிக்கவைத்து அழிப்பதற்காக நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கையினை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.