சம்மாந்துறையில் கைக்குண்டு மீட்பு
அம்பாறை - கல்முனை பிரதான வீதிக்கு அருகில் உள்ள குட்டை ஒன்றில் இருந்து வெடிக்காத நிலையில் புதிய கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
மீன் பிடிக்க குட்டைகளை இறைத்த சிறுவர்களால் குறித்த கைக்குண்டு இன்று (16) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தற்போது மீட்கப்பட்ட கைக்குண்டை செயலிழக்கச் செய்ய விசேட அதிரடி படையினரால் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
அத்துடன் குறித்த கைக்குண்டை கண்டுபிடித்தவர்கள் 119 எனும் பொலிஸ் அவசர பிரிவுக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சம்மாந்துறை பொலிஸார் கைக்குண்டுடை பார்வையிட்டதுடன் குண்டு செயலிழக்கும் விசேட அதிரடி படையினர் மற்றும் குற்றவியல் தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மீட்கப்பட்ட கைக்குண்டை அவ்விடத்தில் இருந்து அகற்றி செயலிழக்க செய்வதற்காக இன்று சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற கட்டளையை பெற்று மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri